கட்டணமில்லா கல்வி சேவையை வழங்கும் பாலிடெக்னிக் கல்லூரி…!

கட்டணமில்லா கல்வி சேவையை வழங்கும் ராஜீவ் காந்தி தனியார் பாலிடெக்னிக் கல்லூரி.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில், 14 ஆண்டுகளாக இயங்கி வரும் ராஜீவ் காந்தி தனியார் பாலிடெக்னிக் கல்லூரி தான், இந்த கட்டணமில்லா கல்வி சேவையை வழங்கி வருகிறது. அதாவது, இந்த ஆண்டு கல்லூரியில் சேரும் மாணவர்கள் படிப்பை முடிக்கும் வரை மூன்று ஆண்டுகளுக்கு எந்த கட்டணமும்  செலுத்த தேவையில்லை எனக் கூறியுள்ளது.

கொரோனா ஊரடங்கால் எப்போதும் இல்லாத அளவுக்கு இடைநிற்றல் அதிகரித்துள்ளதோடு, உயர்கல்வி சேர்க்கை குறைந்துள்ளது. இதனால், இலவசமாக கல்வியை வழங்க முன்வந்துள்ளது இந்த பாலிடெக்னிக் கல்லூரி.

இந்த கல்லூரியை சேர்ந்த மக்கள் ராஜன் என்ற பேராசிரியர் கூறுகையில், இந்த கொரோனா காலகட்டத்தில் மாணவர்களின் தேவையை அறிந்து உதவ வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாகவும், இதனால் வருடத்துக்கு 40 முதல் 50 லட்சம் வரை நஷ்டம்  ஏற்பட்டாலும்,மாணவர்களுக்கு கல்வியை கொடுத்தோம் என்ற திருப்தி காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா ஊரடங்கால் மாணவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க மற்ற கல்லூரிகளும் இதே போன்று இலவச கல்வியை வழங்க வேண்டும் என்பது ராஜீவ் காந்தி பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகத்தின் கோரிக்கையாக உள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.