பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: கல்லூரி மாணவர்கள் வகுப்புகள் புறக்கணிப்பு போராட்டம்!!

  • பொள்ளாச்சியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை 
  • மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

கடந்த 10 நாட்களாக தமிழகத்தை உலுக்கிய சம்பவம் பொள்ளாச்சியில் நடந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை. இதனை செய்ததாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் பல அரசியல் பின்புலம் இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.

மேலும் இக்கும்பலில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதில் பொள்ளாச்சி பகுதி அரசியல் பின்புலம் கொண்ட அரசியல்வாதிகள் வாசிடுகளும் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரியவருகின்றன.

இக்கும்பலில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு மீது கோவை கலெக்டர் குண்டர் சட்டம் விதிக்குமாறு உத்தரவிட்டார். மீதமுள்ளவர்கள் மீதும் குண்டர் சட்டம் விதிக்க அனைத்து பக்கங்களில் இருந்தும் குரல்கள் வழுக்கின்றன.

இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் முறையான விசாரணை நடத்தி குற்றச்செயலில் ஈடுபட்ட அனைவரையும் விரைந்து கைது செய்யக்கோரி உடுமலையில் அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

author avatar
Vignesh

Leave a Comment