கருணாஸை போலீஸ் 3 நாட்கள் வரை கைது செய்யாது…! உயர்நீதிமன்ற மதுரை கிளை…!

கருணாஸ் ஜாமின் மனு மீதான விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி கருணாஸுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை எழும்பூர் நீதிமன்றம் .தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் அவருக்கு ஜாமின் வழங்கியது சென்னை எழும்பூர் நீதிமன்றம்.
Image result for கருணாஸ்
வேலூர் மத்திய சிறையிலிருந்து கருணாஸ் விடுதலை செய்யப்பட்டார். 2 வழக்குகளில் நிபந்தனை ஜாமின் கிடைத்ததையடுத்து கருணாஸ் விடுதலை செய்யப்பட்டார்.மேலும் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் 30 நாட்களுக்கு நாள்தோறும் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டது.

இதன்பின் நேற்று முன்தினம் நெஞ்சுவலி காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் நேற்றுமுன்தினம் அதிகாலை கைது செய்ய கருணாஸ் வீட்டிற்கு நெல்லை போலீசார் வந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.2017-ம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட மோதல் காரணமாக கருணாஸ் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.இதனால் நெல்லை காவல் துணை காண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் சென்னையில் முகாமிட்டனர்.
இந்நிலையில் நெல்லையில் காரை சேதப்படுத்தியது பற்றிய வழக்கில் கருணாஸ் முன்ஜாமீன் மனு மீது உயர்நீதிமன்றக் கிளை நேற்று விசாரணை நடத்தியது.
விசாரணைக்கு பின்னர் உயர்நீதிமன்ற மதுரை கிளை,சட்டமன்ற உறுப்பினர் கருணாஸை, போலீஸ் கைது செய்யாது .அதேபோல்  கருணாஸ் ஜாமின் மனு மீதான விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது. கைது செய்ய போலீஸ் காத்திருப்பதாக கருணாஸ் தரப்பு முறையிட்டது .இதனால் கருணாஸை போலீஸ் 3 நாட்கள் வரை கைது செய்யாது என நீதிபதி உறுதி அளித்தார்.

Leave a Comment