சென்னையில் இன்று முதல் நிமோனியா தடுப்பூசி போடும் திட்டம் தொடக்கம்…!

சென்னையில் இன்று முதல் நிமோனியா தடுப்பூசி போடும் திட்டம் தொடக்கம்.

குழந்தைகள்  பிறந்த நாள், ஒரு குறிப்பிட்ட காலம் வரை, அவர்களுக்கு பிசிஜி – காசநோய், ஹெபடைடிஸ் பி – கல்லீரல் மற்றும் புற்றுநோய், ஓபிவி – இளம்பிள்ளை வாதம், இன்ப்ளூன்ஸா தொற்று, கல்லீரல் தொற்று உள்ளிட்டவைகளுக்கு தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு போடப்படுகின்றன.

இந்நிலையில், குழந்தைகளுக்கு நிமோனியா காய்ச்சலை தடுக்கும் நியூமோகாக்கல் என்ற தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நேற்று முதல் இலவசமாக போடப்பட்டு வருகிறது. அதன்படி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி நேற்று மூலம் இலவசமாக போடப்பட்டு வருவதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சென்னையில் இன்று முதல் இலவச நிமோனியா தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட இருப்பதாக சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் மூலம் அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.