ஊரடங்கு நீட்டிப்பு – இன்று மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை.!

மாதம் இறுதியில் மன் கீ பாத் நிகழ்ச்சியில் தொடர்ந்து உரையாற்றி வரும் பிரதமர் மோடி, இன்றும் மன் கீ பாத் நிகழ்ச்சியில் காணொளி மூலம் உரையாற்றவுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தீவிரம் காரணமாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு 4 கட்டங்களாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த 4 ஆம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டது. இன்றுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கை ஜூன் 30 ஆம் தேதி வரை அதாவது 5 ம் கட்ட ஊரடங்கு நேற்று மத்திய அரசு அறிவித்தது. அதில், ஜூன் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை படிப்படியாக தளர்வுகளுக்கான அறிபவிப்புகள் Unlock 1.0 என்று அடிப்படையில் வெளியிடப்பட்டது. 

இந்த 5 ஆம் கட்ட ஊரடங்கில் நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொதுமுடக்கம் நீடிக்கப்படுகிறது என்றும் மற்ற பகுதிகளில் தளர்வுகளுடன் ஜூன் 30 வரை பொதுமுடக்கம் அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரவு 9 மணி முதல் காலை 5 மணிவரை பொதுமக்கள் வெளியில் நடமாட தடை என்றும் இரவு 9 மணியில் இருந்து காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

முதல் கட்ட தளர்வில், ஜூன் 8 ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள், விடுதிகள், உணவகங்கள், ஷாப்பிங் மால் ஆகியவை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட தளர்வுகளில் பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட முடிவு எடுக்கப்படும். இதனை பெற்றோர்களுடன் மாநில அரசு ஆலோசனை நடத்தி கல்வி நிறுவுனங்களை திறப்பது குறித்து முடிவெடுக்கலாம் என்று கூறியுள்ளது. மூன்றாம் கட்ட தளர்வுகளில், மெட்ரோ ரயில், சினிமா ஹால், நீச்சல் குளம், ஜிம் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட முடிவு எடுக்கப்படும். 

இந்த நிலையில், மாதம் இறுதியில் மன் கீ பாத் நிகழ்ச்சியில் தொடர்ந்து உரையாற்றி வரும் பிரதமர் மோடி, இன்றும் மன் கீ பாத் நிகழ்ச்சியில் காணொளி மூலம் உரையாற்றவுள்ளார். இதில், இந்த 5 ஆம் கட்ட ஊரடங்கை குறித்து ஏதேனும் முக்கிய அறிவிப்பிகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்