ஃபைசர் கொரோனா தடுப்பு மருந்து.. அவசரகால பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி!

கொரோனா பரவிவரும் சூழலில், ஃபைசர் கொரோனா தடுப்பு மருந்துகளை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியது.

உலகளவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து, தடுப்பு மருந்திற்கு அவசரகால ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது. அதன்படி தற்பொழுது பிரிட்டனில் ஃபைசர் தடுப்பூசியும், அமெரிக்காவில் மார்டனா கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்தான ஃபைசர், 95 சதவீதம் கொரோனாக்கு எதிராக செயல்படுவதால், ஃபைசர் தடுப்பு மருந்துகளை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியது. இதனால் ஃபைசர் தடுப்பு மருந்து, முதன்முறையாக அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை பெற்றுள்ளது. இந்த தடுப்பு மருந்து, -70 டிகிரி செல்சியஸில் இருக்க வேண்டும் என்பதால், இதனை கொண்டு செல்ல அதிக செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.