ஃபைசர் கொரோனா தடுப்பூசியை 12-15 வயது தன்னாலவர்களுக்கு சோதனை செய்ய முடிவு .!

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி குறித்த ஃபைசர் அதன் கடைசி கட்ட சோதனையை மாற்றியமைத்துள்ளது. தற்போது, அதிக இளம் தன்னாலவர்களிடம் சோதனை செய்ய முடிவு செய்துள்ளது.

உலகளாவிய கொரோன தடுப்பூசி ஆய்வில் 12 முதல் 15 வயது வரையிலான இளம் பருவத்தினரை சேர்க்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஃபைசர் முதலில் 30,000 தன்னாலவர்களுக்காக திட்டமிடப்பட்டது. ஆனால், செப்டம்பரில் அதை 44,000 பேருக்கு என விரிவுபடுத்தியது.

அமெரிக்கா மருந்து தயாரிப்பாளர் ஃபைசர் மற்றும் ஜெர்மனியின் பயோஎன்டெக் ஆகியோரால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் மதிப்புகளை இந்த மாத தொடக்கத்தில் ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.