Petrol Price : சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று (அக்-21), பெட்ரோல் விலை 10 காசுகளும், டீசல் விலை 9 காசுகளும் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கொண்டு, எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றி அமைக்கின்றனர்.

நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.94.24க்கும் விற்கப்பட்டது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 9 காசுகளும் அதிகரிக்கப்பட்டு விற்கப்படுகிறது.

இதன்படி, சென்னையில் இன்று(அக்-21) பெட்ரோல் விலை 1லிட்டர், ரூ.102.73க்கும், டீசல் விலை 1லிட்டர் ரூ.94.33க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

author avatar
Muthu Kumar

Leave a Comment