ராக்கெட் வேகத்தில் செல்லும் பெட்ரோல்,டீசல் விலை..!அதிரடியாக குறைக்கப்பட்ட பெட்ரோல்,டீசல் விலை ..!முதல்வர் அதிரடி அறிவிப்பு

கர்நாடகாவில் பெட்ரோல் ,டீசல் விலை குறைக்கப்படும் என்று  கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனால் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்த எண்ணெய் நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதன் விலையை அதிகரித்து வந்தது .

இதனிடையே கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. லிட்டருக்கு ரூ.80-ஐ தாண்டியுள்ள பெட்ரோல் விலையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஆனால் மத்திய அரசு அளித்த விளக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவாலேயே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது என்று தெரிவித்தது.

Image result for குமாரசாமி

இந்நிலையில் கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ 2 ரூபாய் குறைக்கப்படும் என்று  கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே ராஜஸ்தான் ,ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் பெட்ரோல்,டீசல் விலையை குறைத்த நிலையில் தற்போது கர்நாடகாவில் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment