‘பீரியட் டிராக்கர்’ – வாட்சப் செயலியில் மாதவிடாய் சுழற்சியை கண்காணிக்கும் வசதி..!

வாட்சப் செயலியில் மாதவிடாய் சுழற்சியை கண்காணிக்கும் வசதி அறிமுகம். 

சிரோனா ஹைஜீன் என்ற நிறுவனம் வாட்ஸ் அப் உடன் இணைந்து இந்தியாவின் முதல் பீரியட் டிராக்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக பெண்கள் தங்களின் மாதவிடாய் சுழற்சியை வாட்ஸ்அப் மூலமாகவே கண்காணிக்க முடியும்.  பெண்கள் வாட்சப் மூலமாக தங்களது மாதவிடாய் சுழற்சியை கண்காணிக்க 9718866644 ஹாய் என்று மெசேஜ் அனுப்ப வேண்டும். இதன் மூலம் பயனர்கள் தங்கள் மாதவிடாய் காலங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

இது குறித்து சிரோனா ஹைஜீன் நிறுவனத்தின் நிறுவனர் தீச் பஜாஜ் கூறுகையில்,  வாட்ஸ்அப் மூலம் எங்கள் பயனர்களுக்கு எளிதாக அணுகலை வழங்க AI தொழில்நுட்பத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம். பீரியட் டிராக்கர் மூலம் மாதவிடாய், கருத்தரித்தல் மற்றும் கர்ப்பத்தை தவிர்ப்பது போன்ற மூன்று இலக்குகளை கண்காணிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். மேலும் பயனர்கள் தங்கள் மாதவிடாய் காலங்கள் மற்றும் அவரின் கடைசி கால விவரங்களை வாட்ஸ்அப் சாட் பாக்ஸில் உள்ளிட வேண்டும். அந்த பதிவை வைத்துதான் பயனர்களுக்கு மாதவிடாய்  தேதியே நினைவூட்டுதல் மற்றும் வரவிருக்கும் சுழற்சி தேதிகள் பகிரப்படும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment