வெறுப்பு அரசியலை மக்கள் ஏற்க மாட்டார்கள்! இந்தியாவில் ட்ரம்பை ஆதரித்த மோடிக்கு இது படிப்பினையாகும் – திருமாவளவன்

இந்தியாவில் ட்ரம்பை ஆதரித்த மோடிக்கு ஒரு படிப்பினையாகும். 

கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில், அதிபர்  தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில், ஜோ பைடன் அவர்கள் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றியடைந்தார். தோல்வியை தழுவிய ட்ரம்ப், தோல்வியை ஏற்க மறுத்து, வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றதாக குற்றம்சாட்டி வருகிறார்.

இந்நிலையில், இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு : வெறுப்பு அரசியலை மக்கள் ஏற்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. இது இந்தியாவில் ட்ரம்பை ஆதரித்த மோடிக்கு ஒரு படிப்பினையாகும்.’ என பதிவிட்டுள்ளார்.

மேலும், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திருமாவளவன், அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஜோ பைடனுக்கும், துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் கமலா ஹாரிஸ்க்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.