மழை வேண்டி 6 சிறுமிகளை நிர்வாணமாக நிற்கவைத்து சடங்கு செய்த மக்கள்…!

மத்திய பிரதேச மாநிலத்தில் மழை வேண்டி 6 சிறுமிகளை நிர்வாணமாக நிற்கவைத்து சடங்கு செய்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் தாமோ எனும் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மழை கடவுளை மகிழ்விப்பதற்காகவும், வறட்சி நீங்கி மழை நன்கு பெய்யும் வேண்டும் என்பதற்காகவும் அப்பகுதி மக்கள் ஒரு சடங்கை  செய்துள்ளனர். அதில் ஒரு பகுதியாக 6 பெண்களை நிர்வாணமாக நிற்க வைத்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சம்பவ இடத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் புந்தேல்கண்ட் பிராந்தியத்திலுள்ள தாமோ மாவட்ட தலைமையகத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜபேரா எனும் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட பனியா எனும் கிராமத்தில் இந்த சடங்கு நடந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் மழை இல்லாமல் வறட்சியாக இருப்பதால் மழை  கடவுளை மகிழ்விப்பதற்காக இளம் பெண்களை நிர்வாணமாக நிற்க வைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது குறித்து அப்பகுதி மக்கள் யாரும் புகார் அளிக்கவில்லை எனவும், இவ்வாறு செய்வதன் மூலமாக மழை வரும் என அப்பகுதி மக்கள் நம்புவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது போன்ற மூடநம்பிக்கைகள் பயனற்றது என்பது பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மட்டுமே முடியும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இது குறித்து அறிக்கையை சமர்ப்பிக்க கோரி தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமோ மாவட்ட நிர்வாகத்திடம் கூறியுள்ளது.

author avatar
Rebekal