,

மனநலம் பாதிக்கப்பட்டவரை சித்தர் என கூறி வந்த மக்கள்.! கரூர் மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை.!.

By

கரூரில் மனநலம் பாதிக்கப்பட்டு, அரைநிர்வாணமாக திரிந்த ஒரு முதியவரை சாமியார் என கூறி மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். 

கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூர் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட முதிவர் ஒருவரை சித்தர் என கூறி அங்குள்ளவர்கள் வணங்கி வந்துள்ளனர். காணிக்கையையும் அளித்து வந்துள்ளனர்.

இதில் ஒரு கும்பல், இவருக்கு கோவில் காட்டுவதாக கூறியும் காணிக்கை வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. தகவல் அறிந்து , கரூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து, அந்த முதியவரை அங்கிருந்து மீட்டு அவருக்கு சிகிச்சை அளித்து அதன் பிறகு தேனியில் உள்ள ஓர் காப்பகத்தில் அதிகாரிகள் பத்திரமாக ஒப்படைத்துள்ளனர்.

Dinasuvadu Media @2023