இங்கிலாந்து ராணி மறைவு.! லண்டனில் பென்னி குயிக் சிலை திறப்பு விழா ரத்து.! தமிழக அமைச்சர் தகவல்.!

முல்லை பெரியாறு அணை கட்டிய கர்னல் பென்னி குயிக் சிலை லண்டனில் நிறுவப்பட்டது. 10ஆம் தேதி சிலை திறக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், இங்கிலாந்து ராணி மறைவின் காரணமாக அந்த சிலை திறப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். 

கேரளாவில் பிரிட்டிஷ் கர்னல் பென்னி குயிக் அவர்களால் கட்டப்பட்ட முல்லை பெரியாறு அணை தான் இன்றளவும் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் என தென்தமிழக விவசாயத்திற்கு பெரிதும் பக்கபலமாக இருக்கிறது.

இதனை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் அவருக்கு சிலைகள் உண்டு. அதே போல தமிழக அரசு சாரிபில் லண்டனில் பென்னி குயிக் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை திறப்பு விழா 10ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது

அதற்காக, தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி லண்டன் சென்றுருந்தார். இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத் மறைந்தார். இதனால் இங்கிலாந்தில் 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதால், அங்கு எந்த அரசு நிகழ்ச்சியும் நடைபெறாது.

இதனால், லண்டனில் நடைபெற இருந்த பென்னி குயிக் சிலை திறப்பு விழா ரத்து செய்யப்பட்டதாக லண்டனில் இருந்து திரும்பி வந்த அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், அது பூங்காவில் நிறுவப்பட்டு விட்டது. சிலை திறப்பு என்பது வெறும் சம்பிரதாயம் தான்.  அதனால் மீண்டும் திறக்க வேண்டிய தேவையில்லை. இப்போதே மக்கள் சிலையை சுற்றி பார்க்க தொடங்கி விட்டனர். என அவர் தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment