பெட்ரோல் குறைவாக இருந்ததால் அபராதம்.. கேரள இரு சக்கர வாகன ஓட்டிக்கு குளறுபடி ரசீது.!

ஹெல்மெட் அணியவில்லை, பெட்ரோல் இல்லை என கேரள போக்குவரத்து காவல்துறையினர் அபராத ரசீது கொடுத்தது இணையத்தில் வைரலானது.

கேரள மாநிலம் பூக்காட்டுப்பட்டி பகுதியில் பாசில் சியாம் என்பவர் தனது ராயல் என்பீல்ட் ரக பைக்கில் தான் தினமும் அலுவலகம் செல்வார்.

அப்படி, அவர் செல்கையில், ஒரு நாள் ஒருவழிப்பாதையில் தவறான திசையில் சென்றுள்ளார். இதனை கவனித்த அந்த பகுதி போக்குவரத்துக்கு போலீசார் அவருக்கு அபராதம் விதித்து ரசீது கொடுத்துள்ளனர்.

இந்த ரசீதை வீட்டிற்கு வந்து கவனித்த பாசிலுக்கு ஒரு ஷாக், அதில், ஹெல்மெட் அணியவில்லை, பெட்ரோல் போதிய அளவு இல்லை என பதியப்பட்டு இருந்துள்ளது. இதனை தனது வாட்ஸப்பில் அவர் ஸ்டேட்டஸ் ஆக வைத்துள்ளார்.

மேலும், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இது பதியப்பட்டுள்ளது. ஆனால், அது இவர் அனுமதியின்றி பதியப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

பின்னர் இதற்கு விளக்கமளித்த பாசில் சியாம் , இது தவறுதலாக ஏதேனும் பிரின்டிங் மிஸ்டேக்காக இருந்து இருக்கும். நான் ஹெல்மெட் அணியாமல் இருந்தேன்  தவறான பாதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டினேன் என விளக்கமளித்துள்ளார் பாசில் சியாம்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment