பேனா நினைவு சின்னம் விவகாரம் – சீமானுக்கு ஓபிஎஸ் கண்டனம்!

கலைஞரின் பேனா நினைவு சின்னத்தை உடைப்பேன் என்று பேசிய சீமானுக்கு, ஓபிஎஸ் கண்டனம்.

சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ஈரோடு கிழங்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் தரப்பில் செந்தில் முருகன் போட்டியிடுவார் என அறிவித்தார். பாஜக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டால் எங்களது வேட்பாளரை வாபஸ் பெறுவோம் என்றும் போட்டியிடாவிட்டால் எங்கள் வேட்பாளர் உறுதியாக போட்டியிடுவார் எனவும் தெரிவித்தார்.

குறிப்பாக இரட்டை இலை சின்னம் இல்லாவிட்டால் தனி சின்னத்திலும் எங்கள் வேட்பாளர் போட்டியிடுவார் எனவும் ஓபிஎஸ் குறிப்பிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், கலைஞரின் பேனா நினைவு சின்னத்தை உடைப்பேன் என்று பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறினார். எந்த ஒரு அரசியல் கட்சி தலைவராக இருந்தாலும் நாகரிகத்துடன் பேச வேண்டும்.

மேலும், கலைஞரை எனக்கு பிடிக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு நினைவு சின்னம் வைத்துள்ளதால், கலைஞருக்கு நினைவு சின்னம் வைப்பது பற்றி பொதுவாக எதுவும் கூற முடியாது.  பேனா சின்னத்தால் பாதிப்பு ஏற்படும் என்பது உறுதியான பிறகே அது குறித்து கருத்து கூறப்படும் எனவும் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு ஓபிஎஸ் பதிலளித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment