38 C
Chennai
Sunday, June 4, 2023

சொன்னதை செய்து காட்டிய ஹிப்ஹாப் ஆதி…கண்கலங்கிய சூப்பர் சிங்கர் பிரபலம்…நெகிழ்ச்சி வீடியோ இதோ.!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி...

பயணிகள் பாதுகாப்பில் அரசு அலட்சியம்… சு.வெங்கடேசன் எம்.பி குற்றச்சாட்டு.!

ஒடிசா பாலசோர் ரயில் விபத்தில் ஒன்றிய அரசு பயணிகளின்...

பட்டா நிலத்தை மயானமாக பயன்படுத்த முடியாது – ஐகோர்ட் உத்தரவு

மாநில பஞ்சாயத்து சட்டப்படி பட்டா நிலத்தை மயானமாக பயன்படுத்த முடியாது என உயர்நீதிமன்றம் ஆணை.

தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தின்படி, பட்டா நிலத்தை மயானமாக பயன்படுத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  திருவள்ளுர் நொச்சிலி கிராமத்தில் இறந்தவரின் உடலை பட்டா நிலத்தில் புதைத்தை எதிர்த்து பாபு என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.

புதைக்கப்பட்டவரின் உடலை தோண்டி எடுத்து மயானத்தில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. நிலத்தின் உரிமையாளர் அனுமதி அளித்தாலும் பஞ்சாயத்து சட்டப்படி பட்டா நிலத்தில் உடலை புதைக்க முடியாது எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.