பாகிஸ்தானில் கட்சி கூட்டத்தில் குண்டுவெடிப்பு; 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50 பேர் காயம்.!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடைபெற்ற இஸ்லாமிய அரசியல் கட்சிக்கூட்டத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் கிட்டத்தட்ட 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மற்றும் 50 பேர் காயமடைந்துள்ளனர்.

பஜாரின் காரில் உள்ள ஜமியத் உலமா-இ-இஸ்லாம்-ஃபஸ்ல் (JUI-F) தொழிலாளர் மாநாட்டில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததாக ஜியோ (GEO) நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

author avatar
Muthu Kumar