I.N.D.I.A எதிர்க்கட்சி கூட்டணித்தலைவர்கள், நாளை மல்லிகார்ஜூன் கார்கேவுடன் ஆலோசனை.!

எதிர்க்கட்சி கூட்டணித்தலைவர்கள் நாளை நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவுடன் ஆலோசனை.

எதிர்கட்சியைச்சேர்ந்த I.N.D.I.A கூட்டணிதலைவர்கள் நாளை நடைபெறும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன், காங்கிரஸ் கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவுடன் காலை 9.30மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெறுகிறது. இதில் எதிர்க்கட்சியினர் இதுவரை நடந்த கூட்டத்தில் மணிப்பூர் வன்முறை விவகாரம் தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்கவேண்டும் எனவும், விவாதம் நடத்தவேண்டும் எனவும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நாளை தொடங்கும் கூட்டத்தொடருக்கு முன்பாக,  மல்லிகார்ஜூன் கார்கேவுடன், I.N.D.I.A எதிர்கட்சி கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

author avatar
Muthu Kumar