மும்பையில் 8 மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து.!

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜிரயில் நிலையம் அருகே உள்ள பனுஷாலி

By murugan | Published: Jul 16, 2020 06:20 PM

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜிரயில் நிலையம் அருகே உள்ள பனுஷாலி குடியிருப்பு பகுதியில் 8 மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தை தொடர்ந்து, மீட்பு பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. இந்த சம்பவம் மாலை 4.43 மணியளவில்  நடந்துள்ளது. மும்பையில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. நகரில் பல பகுதிகளிலிருந்து நீர் தேங்கியுள்ளது. இதனால், வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் மெதுவான இயங்கி வருகிறது.
Step2: Place in ads Display sections

unicc