நாடாளுமன்றத் தேர்தல்: 5 தலைப்புகள் கீழ் 25 காங்கிரஸ் வாக்குறுதிகள்.!

Congress: 2024 மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதியை அறிவித்த பிறகு, பிரதான காட்சிகள் தங்களது தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளனர். அது போல, எதிர்க்கட்சியான காங்கிரஸ் தனது வாக்குறுதிகளை இன்று அறிவித்துள்ளது.

READ MORE – மேடையில் ஓபிஎஸ்… 57 வருசமா 2 கட்சிகள்.. மாற்றம் வேண்டும்.! அன்புமணி ராமதாஸ்.!

இந்தியா கூட்டணி சார்பில் இன்று (மார்ச் 19, 2024) புது டெல்லியில் உள்ள AICC தலைமையகத்தில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் பிரியங்கா காந்தி என காங்கிரஸ் கட்சியின் மற்ற தலைவர்களும் இதில் கலந்து கொண்டனர்.

READ MORE – 400 தொகுதிகளுக்கு மேல் வெல்வதே இலக்கு… பிரதமர் மோடி உரை!

இந்த கூட்டத்தில் மீதமுள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் குறித்து ஆலோசனை செய்து இறுதி செய்யப்பட்டது. மேலும், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சிறுபான்மையினர் என 5 தலைப்புகளின் கீழ், தலா ஐந்து வாக்குறுதிகளை வெளியிட முடிவுசெய்து அறிவித்துள்ளது.

READ MORE – இந்திய பெருங்கடலில் கடற்கொள்ளையர்கள்.. பிரதமர் மோடி உறுதி!

காங்கிரஸின் வாக்குறுதிகள் இதோ

  1. யுவ நீதி (இளைஞர்களுக்கான நீதி)
  2. நாரி நீதி (பெண்களுக்கான நீதி)
  3. கிஷான் நீதி (விவசாயிகளுக்கான நீதி)
  4. ஷ்ராமிக் நீதி (தொழிலாளர்களுக்கான நீதி)
  5. ஹிஸ்ஸேதாரி நீதி (சிறுபான்மையினர் நீதி)

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment