சேலம் : ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள்.! பெற்றோர் விட்டு சென்றதால் அதிரடி நடவடிக்கை.!

சேலம் அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பெண் குழந்தைகளை பராமரிக்க இயலாத காரணத்தால் பெற்றோர்கள் மருத்துவமனையில் விட்டு சென்றனர். 

கடந்த அக்டோபர் மாதம் சேலம் அரசு மருத்துவமனையில் ஒரு பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 20ஆம் தேதி ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன.

மூன்று பெண் குழந்தைகளை தங்களால் வளர்க்க முடியாது என கூறி பெற்றோர்கள் , அரசு மருத்துவமனை முதல்வர் மருத்துவர் வள்ளியிடம் இந்த குழந்தைகளை மருத்துவமனையில் விட்டு செல்ல கேட்டுள்ளார். முதலில் மருத்துவமனை முதல்வர் வள்ளி மறுத்துள்ளார்.

பின்னர் பெற்றோர்கள் மீண்டும் தங்கள் குடும்ப வறுமையை கூறவே, அதன் பின்னர் மருத்துவமனை முதல்வர் வள்ளி சம்மதித்துள்ளார். அதன் பின்னர் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரியிடம் 3 குழந்தைகளும் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர், இந்த விவரம் அறிந்த கலெக்டர் கார்மேகம் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து அந்த குழந்தைகளை பார்வையிட்டார். ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்ததால் எடை குறைவாக இருந்த காரணத்தால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெற்றோர்கள் திரும்பி வந்து கேட்டால் குழந்தைகளை திருப்பி அவர்களிடம் கொடுக்கலாம் எனவும், அப்படி திரும்பி வரவில்லை என்றால் தத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment