பெற்றோர்களே! உங்கள் குழந்தைகள் முன்பாக இதெல்லாம் செய்யாதீங்க!

பெற்றோர்கள் குழந்தைகள் முன்பாக தவிர்க்க வேண்டிய சில நடைமுறைகள்.

இன்று பெற்றோர்களிடம் இருந்து பிள்ளைகள் எதை கற்றுக் கொள்கிறார்களோ, அதை தான் பிள்ளைகள் தங்களது வாழ்க்கையின் நடைமுறையாக்கி கொள்கின்றனர். எனவே, நமது பிள்ளைகளின் வாழ்க்கை செழிப்பாக உருவாக்கப்படுவதற்கும், வீணாக உருக்குலைந்து போவதற்கும் நாம் தான் காரணமாக உள்ளோம்.

தற்போது இந்த பெற்றோர்கள் குழந்தைகள் முன்பாக தவிர்க்க வேண்டிய சில நடைமுறைகளை பற்றி பார்ப்போம்.

ஆபாச வார்த்தைகள்

நாம் நமது குழந்தைகள் முன்பாக ஆபாசமான வார்த்தைகளை பேசுவதை தவிர்க்க வேண்டு. அதாவது தீய சொற்களை பயன்படுத்துவது, சபிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

சண்டைகள்

குழந்தைகளுக்கு முன்பதாக கணவன் – மனைவி, உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினருடன் சண்டையிடுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு சண்டையிடுவது, அவர்களது உள்ளத்திலும் பகை உணர்வை வளர்ப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

புறம்கூறுதல்

நம்மில் பலர், நமது வீட்டிற்கு வரும் உறவினர்களையோ அல்லது நமக்கு அறிமுகமானவர்களையோ அவர்கள் முன்பாக பெருமையாக பேசிவிட்டு, அவர்கள் போன பின்பு, அவர்களை பற்றி தவறாக பேசுதல் உண்டு. இந்த பழக்கத்தை விட்டுவிட வேண்டும்.

பொய் பேசுதல்

நாம் குழந்தைகள் முன்பதற்காகவோ அல்லது நேரடியாகவோ பொய் பேசுவதை தவிர்க்க வேண்டும். போய் பேசும் பழக்கம் அனைத்து தீய பழக்கங்களும் வளர வழிவகுக்கிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.