#Paralympics : ஒரே நாளில் இரண்டு பதக்கம்…! வட்டு எறிதலில் இந்தியவீரர் யோகேஷ்க்கு வெள்ளிப்பதக்கம்…!

வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் யோகேஷ் கத்தூனியா வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது  பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது.  இந்த போட்டியில், இன்று நடைபெற்ற மகளீர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில், இந்தியாவை சேர்ந்த வீராங்கனை அவனி லெகாரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருந்த நிலையில், வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் யோகேஷ் கத்தூனியா வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இன்று ஒரு நாளில் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி என இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளது. ஏற்கனவே பாராலிம்பிக்கில் ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களை இந்தியா பெற்றுள்ள நிலையில், ஐந்தாவதாக ஒரு வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.