மதுரையில் ‘பாண்டிய மன்னர் கால கல்வெட்டு கண்டெடுப்பு’.!

மதுரை வடக்கு மாசி வீதியில் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டியபோது பழங்கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் வடக்கு மாசி வீதியில் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றபோது, பழங்கால கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஆச்சிரியம் அடைந்தனர். மேலும், 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் குலசேகர பாண்டிய மன்னர் பெயர் உள்ளதாக தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்