ஊராட்சி தலைவர் தேர்தல் முடிவு – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

சங்கராபுரம் ஊராட்சிக்கு நடந்த தேர்தலில் தேவி மாங்குடி வெற்றி பெற்றது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சிக்கு நடந்த தேர்தலில் தேவி மாங்குடி வெற்றி பெற்றது செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 2019 -இல் சங்கராபுரம் ஊராட்சி தேர்தலில் தேவி மாங்குடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எதிர்த்து போட்டியிட்ட பிரியதர்ஷினி இம்முடிவை ஏற்காததால், மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்டன.

devisivaganagai

இந்த முறை பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து தேவி மாங்குடி சென்னை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் சங்கராபுரம் ஊராட்சிக்கு நடந்த தேர்தலில் தேவி மாங்குடி பெற்றது செல்லும் என தீர்ப்பு வழங்கினர். உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பை எதிர்த்து, பிரியதர்ஷினி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

devisupremecourt

இதை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் உயர்நீதிமன்றம் கிளையின் தீர்ப்பை உறுதிப்படுத்தி, தேவி மாங்குடியின் வெற்றி செல்லும் என தீர்ப்பளித்தனர். மேலும், பிரியதர்ஷினி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தனர். உச்சநீதிமன்றம் தீர்ப்பை அடுத்து, தேவி மாங்குடி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment