வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டனுக்கு கவுரவ குடியுரிமை வழங்கிய பாகிஸ்தான்.! காரணம் என்ன தெரியுமா..?

  • மற்ற வீரர்கள் பாகிஸ்தானில் விளையாட மறுப்பு தெரிவிக்கும் நிலையில்  கடந்த 2016-ம் ஆண்டு முதல் டேரன் சேமி விளையாடி வருகிறார்.
  • தொடர்ந்து பயணம் செய்து விளையாடி டேரன் சேமி அவருக்கு பாகிஸ்தான் கவுரவ குடியுரிமை வழங்க முடிவு செய்து உள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணி விளையாடியது. அப்போது இலங்கை அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 6  பாதுகாப்பு படையினரும் , 2 பொதுமக்களும் இறந்தனர். இந்த தாக்குதலால் சர்வதேச கிரிக்கெட் வாரியம் அங்கு போட்டி நடத்தாமல் இருந்து வந்தது.

மேலும் பாகிஸ்தான்சென்று விளையாட மற்ற நாட்டு வீரர்கள் பயந்து வந்தனர். இதனால் பாகிஸ்தான் தங்களது போட்டிகள் அனைத்தையும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தி வந்தது. இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் “பாகிஸ்தான் சூப்பர் லீக்” தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெஷாவர் ஜால்மி அணியின் கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமி  செயல் பட்டு வருகிறார். இவர் தொடர்ந்து பாகிஸ்தானில் விளையாடி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் 2017-ம் ஆண்டு நடைபெற்ற “பாகிஸ்தான் சூப்பர் லீக்”  தொடரில்   பெஷாவர் ஜால்மி அணி டேரன் சேமி தலைமையில் கோப்பையை கைப்பற்றியது. பாதுகாப்பு காரணங்களால் மற்ற வீரர்கள் பாகிஸ்தானில் விளையாட மறுப்பு தெரிவிக்கும் நிலையில் தொடர்ந்து பயணம் செய்து விளையாடி டேரன் சேமி அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தான் அரசு அவருக்கு கவுரவ குடியுரிமை வழங்க முடிவு செய்து உள்ளது.

வருகின்ற மார்ச் 23-ம் தேதி இஸ்லாமாபாத்தில்  நடக்கும் நிகழ்ச்சியில் பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அல்வி  குடியுரிமைக்கான சான்றிதழை வழங்க உள்ளார்.

author avatar
Dinasuvadu desk