சீனாவின் கொரோனா தடுப்பு மருந்தை வாங்க ரூ.1,095 கோடி ருபாய் நிதி ஒதுக்கிய பாகிஸ்தான்!

சினாவின் கொரோனா தடுப்பு மருந்தை வாங்க சினோபார்ம் நிறுவனத்திற்கு வழங்க 1,095 கோடி ருபாய் நிதியை ஒதுக்கியது பாகிஸ்தான் அரசு.

உலகளவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்தவகையில், சீன அரசுக்கு சொந்தமான சினோபார்ம் நிறுவனம், 2 பிரிவுகள் தனித்தனியாக 2 தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது.

இதில் பெய்ஜிங்கில் தயாரிக்கப்பட்டு வந்த தடுப்பூசி, 86 சதவீதம் கொரோனாக்கு எதிராக செயல்படும் எனவும், வுஹான் நகரில் தயாரிக்கப்படும் மற்றொரு தடுப்பூசி 79.3 சதவீதம் கொரோனாக்கு எதிராக செயல்படுவதாக கூறப்பட்டுள்ளதை தொடர்ந்து சீனா, தனது முதல் கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதலை சினோபார்ம் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

இந்நிலையில், சீனாவின் கொரோனா தடுப்பு மருந்தை வாங்க சினோபார்ம் நிறுவனத்திற்கு வழங்க 1,095 கோடி ருபாய் நிதியை ஒதுக்கியது பாகிஸ்தான் அரசு. அதுமட்டுமின்றி, 2 மில்லியன் டோஸ் தடுப்பூசியை ஆரம்பத்தில் வாங்க பாகிஸ்தான் அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகவும், இது 2021 முதல் காலாண்டில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் முன்னணி ஊழியர்களுக்கு இலவசமாக போடப்படும் என பாக்கிஸ்தான் நாடு அரசு தெரிவித்துள்ளது.