சாலையில் சாணமிட்ட எருமையால் உரிமையாளருக்கு 10 ஆயிரம் அபராதம்!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள எருமை ஒன்று சாலையில் சாணம் போட்டதால் அதன் உரிமையாளருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகளால் பெற்றோர்கள் சில இடங்களில் அபராதம் கட்ட வேண்டிய நிலை வரும், அது பலரும் சந்தித்து இருக்கக்கூடிய ஒரு சூழல். ஆனால், விலங்குகளால் உரிமையாளர்களுக்கு அபராதம் என்ற நிலை வராது, சில இடங்களில் ஏதேனும் பொருட்களை சேதப்படுத்தி விட்டால் அதை வாங்கி கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆனால் மத்திய பிரதேசத்தில் விசித்திரமான ஒன்று நடந்துள்ளது. மாடுகள் வளர்ப்பது சிக்கலான ஒரு காரியம் தான்.

மிகப்பெரிய அளவிலான, அதிக பலன் தரக்கூடிய ஒரு விலங்கு மாடு. பல இடங்களில் மாடுகளை வளர்க்க ஆசை இருந்தாலும் அதை கட்டி வைக்க இடம் இருக்காது. இதனால் சாலைகளில் அலைய விடுவதால் பிறருக்கு தான் துன்பமாக அமைந்து விடுகிறது. தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் மாநகராட்சி பகுதியில் உள்ள முக்கியமான சாலை ஒன்றில் சில மாடுகள் சாணம் போட்டு விட்டு சென்றுள்ளன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பிற வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்ததால் மாட்டின் உரிமையாளருக்கு அந்த மாநகராட்சி நிர்வாகம் 10,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

author avatar
Rebekal