வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி.! தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பு.!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 6 மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 6 மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை,  உள்பட 6 மாவட்டங்களில் கோடை மலைக்கு வாய்ப்பு உள்ளது. அரபிக்கடலின் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக சாதமான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே அரபிக்கடலில் புயல் உருவாகுவதால் வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருந்த நிலையில், இந்த வருடம் ஜூன் 5 ஆம் தேதி பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதையடுத்து, ஜூன் 1 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இப்போது அதில், மற்றோரு திருப்பமாக அரபிக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகுகிறது. 

இது, நாளை புயலாக வலுப்பெற்று ஓமன் நாட்டை நோக்கி நகர தொடங்கும். இதன் காரணமாக காற்று சுழற்சி ஏற்படுவதால், தென்மேற்கு பருவமழை துவங்குவது தாமதமாக கூடும் என்று தெரிவித்துள்ளனர். இந்த புயலால் இந்தியாவிற்கு நேரடி பாதிப்பு கிடையாது. பருவமழையை தாமதப்படுத்துவதில் இது முக்கிய பங்காற்றும் என்று கூறப்படுகிறது.

அதேநேரம் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்