போதைப்பொருளால் ஆஸ்கர் பட நடிகர் தற்கொலை.? சிக்கிய கடிதம்.?

ஆஸ்கார் விருது பெற்ற ‘பாராசைட்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததற்காக புகழ்பெற்ற தென் கொரிய நடிகர் லீ சன்-கியூன், தென்கொரியாவின் சியோல் நகரில் உள்ள பூங்கா அருகே காரில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாக சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். தற்போது, அவரது மர்ம மரணம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

தென் கொரியாவில் கடுமையான போதைப்பொருள் சட்டங்கள் உள்ளன, அந்நாட்டு அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட போதைப்பொருளை பயன்படுத்தினால், ஆறு மாதங்கள் முதல் 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

இந்தநிலைஇல், லீயின் மனைவி காவல்துறைக்கு அளித்த புகாரைத் தொடர்ந்து, அவர் வீட்டை விட்டு வெளியேறியதாகக் கூறி, தற்கொலைக் குறிப்புடன் கொண்ட கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்போது, அந்த கடிதத்தை வைத்து அடுத்தகட்ட விசாரணையை தொடங்கியுள்ளது. வீட்டில் இருந்து சென்ற நடிகர் லீ சன்-கியூனை, காணவில்லை என அவரது மனைவி புகார் அளித்திருந்த நிலையில், காரில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இவர் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை வேற ஏதும் காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறார்கள்.

நைஜீரியாவில் இரு சமூகத்தினருக்கு இடையே நடந்த மோதலில் 16 பேர் பலி, 300 பேர் காயம்..!

லீ சன்-கியூன் ‘பாராசைட்’ படத்தில் பணக்கார தந்தையாக நடித்தார். இதை தவிர, ஹெல்ப்லெஸ், ஆல் அபௌட் மை வைஃப் என பல தென் கொரிய திரைப்படங்களிலும் அவர் முக்கிய வேடங்களில் நடித்தார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.