சண்டையிட்டு வாழும் கணவனுக்கு மனைவி பராமரிப்பு தொகை கொடுக்க உத்தரவு!

தனித்தனியாக சண்டையிட்டு வாழும் கணவனுக்கு மனைவி பராமரிப்பு தொகை கொடுக்க உத்திரபிரதேச குடும்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக இந்தியாவில் கணவன் மனைவிகள் விவாகரத்து பெற்றவர்களாக இருக்கும் பட்சத்தில் மனைவி மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு கணவர் சார்பில் மாதம்தோறும் பராமரிப்பு தொகை கொடுக்கப்பட வேண்டும் என்பது சட்டம். ஆனால் உத்திரப்பிரதேச மாநிலத்தில் தற்போது அப்படியே மாறி நடந்துள்ளது.

ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியராக இருக்க கூடிய பெண் ஒருவர் தனது கணவருடன் பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு மாத ஓய்வூதியமாக 12,000 ரூபாய் வருகிறது. இதனை தொடர்ந்து அவரது கணவர் தனது மனைவியிடம் இருந்து தனக்கு தேவையான பராமரிப்பு செலவுத்தொகையை இந்து திருமண சட்டம் 1955 இன் கீழ் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை கடந்த புதன்கிழமை விசாரித்த நீதிபதிகள் ஓய்வு பெற்ற அரசு ஊழியராக இருந்தாலும், 12,000 ரூபாய் மாத வருமானம் வருவதால் அந்தப் பெண் தனது கணவருக்கு பராமரிப்பு செலவு தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார்.

author avatar
Rebekal