பொதுத்தேர்வுக்காக அமைச்சர் தங்கம் தென்னரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

Thangam Thennarasu: அமைச்சர் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆய்வு கூட்டம் காணொளி மூலமாக நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு  கோடைகாலத்தின் போது சீரான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யவும், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியுள்ளதால் தேர்வு முடியும் வரை தமிழகம் முழுவதும் மின் நிறுத்தம் செய்யக்கூடாது.

READ MORE- 7.72 லட்சம் மாணவர்கள்., 3,300 தேர்வு மையங்கள்… இன்று தொடங்கும் +2 பொதுத்தேர்வு.! 

தேர்வு காலம் முடியும் வரை துணை மின் நிலையங்களில் முன் பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டாம்.  கோடைகால மின் தேவையை எந்த பற்றாக்குறை இல்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும். தொடர்ச்சியான மின் தடங்கல் ஏற்படும் இடங்களில்  சிறப்பு கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும் என அனைத்து மின்வாரிய தலைமை பொறியாளர்களுக்கும், மேற்பார்வை பொறியாளர்களுக்கும்  அறிவுறுத்தியுள்ளார்.

இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. மொத்தமாக 7,534 பள்ளிகளில் 3.52 லட்சம் மாணவர்கள், 4.13 லட்சம் மாணவியர்கள் என மொத்தம் 7.72 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். மொத்தம் 3,300க்கும் அதிகமான தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.

READ MORE- இதுதான் நிபந்தனை…  பணிப்பெண் விவகாரத்தில் திமுக எம்எல்ஏ மகன் மருமகளுக்கு ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம்.! 

இன்று முதல் வரும் மார்ச் 22-ஆம் தேதி வரை + 2 பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கிடையில் 11ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி மார்ச் 25-ஆம் தேதி முடிவடைக்கிறது. 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ஆம் தேதி முடிவடைக்கிறது.

author avatar
murugan

Leave a Comment