ஆரஞ்ச் அலர்ட்..! நாளை இந்த 4 மாவட்டங்களில் வாய்ப்பு..!

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்டு 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு இயக்கத்தில் கையெழுத்திட்டார் கவிஞர் வைரமுத்து..!

கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில்  ஆகிய ஏழு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை சென்னை உட்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக கனமழைவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக மற்றும் புதுச்சேரியில் 17-ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.