தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு துணைமுதல்வர் பன்னீர்செலவம் வருகை: அடுத்தக்கட்ட நகர்வு என்ன?

  • நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இழுபறி காட்டி வருகிறார்
  • நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருமுனைப் போட்டி தற்போது உறுதியாகியுள்ளது

வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை படுஜோராக நடைபெற்று வருகிறது. திமுக தரப்பில் இடதுசாரி கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்துள்ளன. அதிமுக தரப்பில் பாமக மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் இணைந்துள்ளன. இந்நிலையில் தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க இரு அணிகளும் தீவிரமாக போராடி வருகிறது. அதே நேரத்தில் தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குன்றி இருப்பதால் அவரை பார்க்க அவ்வப்போது கட்சித் தலைவர்கள் சென்று சந்தித்து வருகின்றனர்.

தேமுதிககவை அதிமுக கூட்டணியில் சேர பாமகவை விட ஒரு தொகுதி அதிகம் கேட்டு உள்ளது. இதற்கு மறுத்த அதிமுக 5 தொகுதிகள் கொடுப்போம் எனவும் கூறியுள்ளது. ஆனால் கண்டிப்பாக பாமகவை விட ஒரு தொகுதி அதிகம் வேண்டும்… அல்லது ஐந்து தொகுதி மற்றும் 21 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் உரிமை ஆகியவற்றை கேட்டுள்ளது தேமுதிக.

இதனால் கூட்டணியில் தற்போது இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் அதிமுக வின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் விஜயகாந்த் அவர்களை அவரது வீட்டில் நேரில் சந்தித்து உள்ளார். இன்னும் சில தினங்களில் பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச உள்ளார்.இந்த கூட்டத்தில்  கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் ஏற்றுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக தேமுதிகவை வேகமாக தங்களது கூட்டணியில் இணைத்துக் கொள்ள அதிமுக படாதபாடுபடுவதாகத் தெரிகிறது.இதற்காக தற்போது பன்னீர்செல்வம் விஜயகாந்தை சந்தித்துள்ளார் எனவும் செய்திகள் வந்துள்ளது.

author avatar
Srimahath

Leave a Comment