Monday, June 3, 2024

மணிப்பூர் கலவரம் : நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு நோட்டீஸ்.!

மணிப்பூர் கலவரம் தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளன.

மணிப்பூர் கலவரம் மே மாதம் ஆரம்பித்து இன்னும் முடியாமல் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை பலரது கோரிக்கைகளாக உள்ளது.

இந்நிலையில் இந்த கோரிக்கைகள் மேலும் பல மடங்கு வலுக்கும் வண்ணம் நேற்று வெளியான ஒரு கொடூர வீடியோ ஒன்று அமைந்துள்ளது. அந்த வீடியோவில் இரு பெண்களை ஆடைகளின்றி ஒரு கும்பல் இழுத்து செல்லும் படி அமைந்துள்ளது.

நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த விடியோவானது நேற்று வெளியானது முதல் ஆளும் கட்சி , எதிர்க்கட்சி என பாகுபாடின்றி பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில் இன்று தொடங்க உள்ள மழைக்கால கூட்டத்தொடரில் முதலில் மணிப்பூர் கலவரம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று கூறி, மற்ற அலுவல் விவகாரங்களை ஒத்திவைக்க வேண்டும் என கூறி மக்களவை மாநிலங்களவை என இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளது. இதனை ஏற்று விவாதங்கள் நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

RELATED ARTICLES