4,700mAh பேட்டரி..80W ஃபிளாஷ் சார்ஜிங்..12ஜிபி ரேம்..! ஒப்போவின் புது மாடல் என்ன தெரியுமா.?

ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒப்போ அதன் புதிய ரெனோ 11 சீரிஸை, நவம்பர் 23ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், இன்று ஒப்போ ரெனோ 11 மற்றும் ஒப்போ ரெனோ 11 ப்ரோ என இரண்டு மாடல்கள் அறிமுகம் செய்துள்ளது. இதோடு ஒப்போ பேட் ஏர்2 என்கிற டேப்லெட்டும் அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன்கள் கடந்த ஜூலை மாதம் அறிமுகமான ஒப்போ ரெனோ 10 சீரிஸின் வாரிசுகளாக உள்ளன. அதன்படி, ரெனோ 10 சீரிஸில் உள்ள அம்சங்களில் பிராசஸர், பேட்டரி போன்ற ஒரு சிலவை மட்டும் மாற்றம் செய்யப்பட்டு, ஒப்போ ரெனோ 11 சீரிஸ் வெளியாகியுள்ளது.

ஒப்போ ரெனோ 11 ப்ரோ விவரங்கள்

டிஸ்பிளே

ரெனோ 11 ப்ரோவில் 2772 × 1240 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 6.74 இன்ச் ஓஎல்இடி கர்வ்டு டிஸ்பிளே கொடுக்கபட்டுள்ளது. ரெனோ 11 போலவே 11 ப்ரொவில் உள்ள டிஸ்பிளேவும் 1.07 மில்லியன் நிறங்களை ஒருங்கிணைத்து காட்டுவதோடு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240 ஹெர்ட்ஸ் டச் சம்ப்ளிங் ரேட்டையும் கொண்டுள்ளது. மேலும், 1600 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸும் உள்ளது.

50 எம்பி கேமரா, 4800mAh பேட்டரி மற்றும் 80W சார்ஜிங்.! அறிமுகமானது ஒப்போ ரெனோ 11.!

பிராசஸர்

அட்ரினோ கிராஃபிக்ஸ் கார்டுடன் இணைக்கப்பட்ட, 8 கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 1 பிராசஸர் ஆனது ஒப்போ ரெனோ 11 ப்ரோவில் பொருத்தப்பட்டுள்ளது. அதோடு அதோடு ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான கலர் ஓஎஸ் 14.0 உள்ளது. வைஃபை 6 , புளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் என்எஃப்சி சப்போர்ட்டும் உள்ளது.

கேமரா

ரெனோ 11 ப்ரோவில், ரெனோ 11 மாடலில் உள்ள அதே கேமரா அம்சங்கள் உள்ளன. அதன்படி, 50 எம்பி வைட்-ஆங்கிள் மெயின் கேமரா, 32 எம்பி போர்ட்ரெய்ட் லென்ஸ் மற்றும் 2x ஹைப்ரிட் ஆப்டிகல் ஜூம், 20 x டிஜிட்டல் ஜூம் கொண்ட 8 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது.

செல்ஃபிக்காக முன்புறத்தில் 32 எம்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமரா மூலம் 720P முதல் 4K தெளிவுடன் கூடிய வீடியோவைப் பதிவு செய்யலாம். இதில் ப்ரோ மோட், போர்ட்ரெய்ட், நைட் சீன், ஹை பிக்சல், பனோரமா, ஸ்லோ மோஷன், டைம்-லாப்ஸ் போட்டோ, மல்டி-வியூ வீடியோ போன்ற கேமரா அம்சங்கள் உள்ளன.

பேட்டரி

190 கிராம் எடையுள்ள இந்த போனில் 4,700 mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்ய யூஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் கூடிய 80 வாட்ஸ் பிளாஷ் சார்ஜிங் வசதி உள்ளது.

அதோடு இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், பேஸ் லாக், ஜியோமேக்னடிக் இண்டக்டிவ், லைட் இன்டக்டிவ், ப்ராக்ஸிமிட்டி சென்சார், அண்டர் ஸ்கிரீன் லைட் சென்சார், கைரோஸ்கோப், இன்ஃப்ராரெட் ரிமோட் கண்ட்ரோல் போன்ற சென்சார்கள் உள்ளன.

ஆண்ட்ராய்டு போன்ல கூட 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே..ஆன இதுல..? ஏமாற்றமளிக்கும் ஆப்பிள்.!

ஸ்டோரேஜ் மற்றும் விலை

அப்சிடியன் பிளாக், டர்க்கைஸ் கிரீன் மற்றும் மூன் ஸ்டோன் என மூன்று புதிய வண்ணங்களில், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் ஒப்போ ரெனோ 11 ப்ரோ அறிமுகமாகியுள்ளது.

இதில் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் 3,499 யுவான் (ரூ.41,100) என்ற விலையிலும், 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் 3,799 யுவான் (ரூ.45,100) என்ற விலையிலும் ஒப்போவின் அதிகாரப்பூர்வ சீன இணையதளத்தில் விற்பனைக்கு உள்ளது.

இந்த ரெனோ 11 சீரிஸில் அறிமுகமாகியுள்ள ரெனோ 11 மற்றும் ரெனோ 11 ப்ரோ ஆகிய இரண்டு மாடல்களும் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.