செடியை வச்சா மட்டும் போதாதுக்கங்க…..!!! எப்படி அதை பராமரிக்க வேண்டுமென்றும் தெரிந்து கொள்ள வேண்டும்…..!!!!

வீடு பசுமையாக இருந்தால், நமது மனதும் பசுமையாக இருக்கும். எவ்வளவு தான் கஷ்டம், கவலை துன்பம் இருந்தாலும் இந்த பசுமையான செடிகளை பார்க்கும் போது மனதில் ஒரு ஆறுதல் கிடைக்கும். எல்லாவற்றையும் மறந்து சந்தோசமாக இருக்க முடியும்.
நமது வீட்டில் எவ்வளவு அழகான செடிகள், பலன் தரும் செடிகளை வைத்திருந்தாலும், அந்த செடிகளின் வளர்ச்சி, நமது பராமரிக்கும் முறைகளை பொறுத்து தான் இருக்கும். தற்போது செடிகளை எப்படி பராமரிப்பது என்பது பற்றி பார்ப்போம்.

பராமரிக்கும் முறை :

  • குளிர்க்காலங்களில் செடிகளுக்கு தினமும் தண்ணீர் பாய்ச்சுவதை தவிர்க்க வேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் ஊற்றினால் போதுமானது. அளவுக்கு அதிகமான ஈரப்பதம் செடிகளை அளித்து விடுகிறது.
  • வாரம் ஒருமுறையாவது நாம் வைத்திருக்கும் செடிகளை கொத்தி அடி மண்ணை சுற்றி விட வேண்டும். இதனை செய்யாமல் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதால் எந்த பயனும் இருக்காது.
  • மாதம் ஒருமுறை செடிகளை பூச்சிகள் தாக்காமல் இருக்க பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்க வேண்டும். மருந்துகளை அனைத்து வகையான செடிகளுக்கும் தெளிக்க வேண்டும்.
  • வேப்ப இலை தூள்கள் செடிகளுக்கு ஒரு சிறந்த பூச்சி கொல்லியாக உள்ளது.

வேப்ப இலை தூள் செய்யும் முறை : 
வேப்ப இலைகளை சேமித்து வைத்து, நன்கு வெயில் காயவைத்து , பின் அதை தூளாக செய்து வைத்து கொள்ள வேண்டும். இந்த தூளை செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்தி விட வேண்டும்.

  • செடிகளுக்கு இயற்க்கை உரங்களை அதிகமாக பயன்படுத்தினால் மிகவும் நல்லது.
  • தொட்டி செடிகளுக்கும் இது போன்ற பராமரிப்பு முறைகளை மேற்கொண்டால் செடி சீராக வளரும்.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment