ஆன்லைன் ரம்மி – பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை முயற்சி…!

ஆன்லைன் சொத்தாட்டத்தில் பணத்தை இழந்த பொறியியல் கல்லூரி மாணவன் தற்கொலை முயற்சி. 

சமீப காலமாக ஆன்லைன் ரம்மியால் தங்களது பணத்தை இழந்தபலர் தங்களது உயிரை மாய்த்து வருகின்றனர். அந்த வகையில், சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள சதாசிவபுரம் கிராமத்தை சேர்ந்த சூர்யா பிரகாஷ் என்பவர் பொறியியல் இரண்டாம் ஆண்டு பயின்று வந்துள்ளார்.

இந்த நிலையில், அவர் தனது போனில் அவ்வப்போது ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். இந்த நிலையில், அவரது தந்தை வங்கி கணக்கில் இருந்த ரூ.75 ஆயிரத்தை எடுத்து ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவரது பெற்றோருக்கு தெரியாமல் அவர் இந்த பணத்தை எடுத்து விளையாடி தோல்வியடைந்துள்ளார். இந்த நிலையில், அவரது தனத்தை திடீரென வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுத்து வருமாறு கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சூர்யபிரகாஷ், தனது பெற்றோர் திட்டுவார்கள் என்ற பயத்தில் பூச்சி மருந்தை குடித்து விட்டு படுத்துள்ளார்.

மறுநாள் காலை அவர் எழுந்தததும் வாந்தி எடுத்துக் கொண்டு இருந்துள்ளார். உடனடியாக அவரை பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவன் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தை அறிந்த போலீசார் மருத்துவமனைக்குச் சென்று மாணவனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், மாணவன் ஆன்லைன் ரம்மி விளையாடி 75 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்ததால் பெற்றோர்கள் திட்டுவார்கள் என விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து மாணவன் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment