நாயகன் மீண்டும் வரார்.! இந்திய சந்தையில் களமிறங்கும் PUBG புதிய வடிவில்…. வெளியான சூப்பர் தகவல்.!

இந்தியாவில் மீண்டும் PUBG விளையாட்டை அதிகாரிகள் அனுமதித்துள்ளதாக கிராப்டன் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். 

கடந்த 2020, செப்டம்பரில் இந்திய கவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 இன் பிரிவு 69A இன் கீழ் நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, 117 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடையில் இளைஞர்கள் மத்தியல் மிக பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய PUBG விளையாட்டும்  அடங்கும். அந்த சமயம் கிட்டத்தட்ட 33 மில்லியன் (3 கோடிக்கும் அதிகம்) பயனர்களை PUBG கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு,PUBG ஸ்டுடியோஸ் மற்றும் தென் கொரியாவின் வீடியோ கேம் நிறுவனமான Krafton ஆகியவை சேர்ந்து, இந்தியாவில்,  PUBG விளையாட்டு செயலியை மறுஉருவாக்கம் செய்து PUBG India Private Ltd என பதிவு செய்தனர்.  மே 2021 இல் BGMI என அறிமுகப்படுத்துவதாக Krafton அறிவித்து, இறுதியாக ஜூலை 2 அன்று Android சாதனங்களுக்கும் ஆகஸ்ட் 18 அன்று iOS சாதனங்களுக்கும் BGMI வெளியிடப்பட்டது. ஒரு வருட காலப்பகுதியில், BGMI செயலியை 100 மில்லியன் பயனர்களை தாண்டியது. ஆனால் BGMI செயலியையும் மத்திய அரசு தடை செய்தது.

இந்நிலையில், தற்போது PUBG செயலியானது மீண்டும் இந்தியாவில் வரவுள்ளதாக கிராஃப்டன் CEO தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், Battlegrounds Mobile India இன் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க அனுமதித்த இந்திய அதிகாரிகளுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என குறிப்பிட்டார். கடந்த சில மாதங்களாக இந்திய இணையதள விளையாட்டு பிரிவு அளித்த ஆதரவிற்கும் பொறுமைக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என கிராப்டன் தலைமை அதிகாரி அன்மையில் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், இந்தியாவில் மீண்டும் PUBG விளையாட்டு வர இந்திய அதிகாரிகள் ஒப்புதல் வழங்கியுள்ளது தெளிவாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூரவ அறிவிப்புக்காளான் எப்போது இந்தியாவில் மீண்டும் PUBG வரும் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.