வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடமா ?தென்கொரியா விளக்கம்

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை காரணமாக  வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தென்கொரியா மறுத்துள்ளது.

வடகொரிய அதிபராக இருந்து வருபவர் கிம்ஜாங்.ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ஆம்   தேதி கிம் ஜாக்கின் தாத்தாவின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.இந்த விழாவில் நாட்டின் உயரதிகாரிகள் அனைவரும் கலந்து கொள்வது வழக்கம்.ஆனால் கடந்த 15-ஆம் தேதி நடைபெற்ற விழாவில் கிம் கலந்து கொள்ளவில்லை. இது பெரும் விவாதத்தை கிளப்பியது.

இதற்குஇடையில் தான் இவர் சமீபத்தில் செய்து கொண்ட அறுவை சிகிச்சை காரணமாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் அதிகம் உலாவி வந்தது.சிஎன்என் செய்தி நிறுவனம், வட கொரிய விவகாரங்களை கவனித்து வருகிறது.இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியிலும் கிம்மின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தான் தென்கொரியா இந்த செய்திகளை மறுத்துள்ளது.அண்டை நாடான வடகொரியாவில் இதுபோல் எந்த விஷயமும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளது.