வடகொரியா : நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணை சோதனை….!

வடகொரியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணை சோதனை அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

வடகொரியா நீண்ட தூரம் பயணம் செய்யும் ஏவுகணையை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெற்றிகரமாக ஏவி பரிசோதனை செய்துள்ளது. இந்த பரிசோதனை வார இறுதியில் மேற்கொள்ளப்பட்டதாக வட கொரிய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த சோதனை ஏவுகணை தண்ணீருக்கு மேல் 1500 கிலோமீட்டர் பயணம் செய்ததாகவும், இந்த ஏவுகணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மூல ஆயுதம் எனவும், இது நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான மற்றொரு பயனுள்ள தடுப்பு வழி முறை எனவும் தென்கொரிய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இது குறித்து வடகொரிய ஆய்வாளர்கள் கூறுகையில், இது நாட்டின் முதல் நீண்ட தூர பயண ஏவுகணை எனவும், இது அணு ஆயுதத்தை கொண்டு செல்லக் கூடியது எனவும் தெரிவித்துள்ளனர். இந்த நீண்ட தூர ஏவுகணை சோதனை குறித்து அமெரிக்க ராணுவம் கூறுகையில், வடகொரியாவின் ராணுவத் திட்டத்தை வளர்க்கும் இந்த ஏவுகணை சோதனை, அண்டை நாடுகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஏற்படும் அச்சுறுத்தலை காட்டுகிறது என தெரிவித்துள்ளது.

author avatar
Rebekal