நொய்டா மெட்ரோ ரயில் செப் -7 முதல் தொடக்கம் ..புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடு.!

நொய்டா மெட்ரோ ரயில் செப்டம்பர் -7 முதல் தொடங்குவதால் புதிய வழிகாட்டு நெறிமுறை வெளிட்டுள்ளது.

நொய்டா அக்வா மெட்ரோ ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படுவதற்கு முன்பு புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியானது. அதில், முக்கவசம் அணியவில்லை என்றால் ரூ.500 அபராதமும், எச்சில் துப்பியவர்களுக்கு ரூ .100 வரை அபராதம் செலுத்த வேண்டும் என நொய்டா மெட்ரோ ரயில் கழகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்வா லைன் என்றும் அழைக்கப்படும் நொய்டா-கிரேட்டர் நொய்டா மெட்ரோவின் சேவைகள் செப்டம்பர் -7 முதல் தொடங்கவுள்ளது என ‘NMRC’ நேற்று கூறியது.

மெட்ரோ நிலையங்கள் மற்றும் ரயில் வளாகங்களுக்குள் எச்சில் துப்பியதைக் கண்டறிந்த பயணிகளுக்கு ரூ .100 அபராதம் செலுத்த வேண்டும். அதேபோல், முக்கவசம் அணியாமல் பயணிக்கும் பயணிகளுக்கு ரூ .500 அபராதம் செலுத்த வேண்டும் ”என்று ‘NMRC’ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.