நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்.. அறிவியலில் திருப்புமுனையை ஏற்படுத்திய விஞ்ஞானிகள்!

நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள், அறிவியலில் திருப்புமுனையை ஏற்படுத்திய விஞ்ஞானிகள்.

நோபல் பரிசு:

nobel

நோபல் பரிசு என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும், பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும், சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும். எனினும், சிலர் இந்தப் பரிசைப் பெற்றுக்கொள்ள மறுத்ததும் உண்டு. இது வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபெல் என்பவரால் 1895ல் தொடங்கப்பட்டது.  முதல் பரிசு 1901 ல் வழங்கப்பட்டது. குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்தப் பரிசு அறிவிக்கப்படும்.

nobel

இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், அறிவியல் மற்றும் அமைதி ஆகியவைகளுக்கு நோபல் பரிசு வழங்கபடுகிறது. பரிசு பெறும் ஒவ்வொருவரும், ஒரு தங்கப்பதக்கமும் ஒரு பட்டயமும், நோபல் அறக்கட்டளையின் அவ்வருட வருமானத்தைப் பொறுத்து பரிசுப் பணமும் பெறுவர் என்று தெரிவிக்கப்படுகிறது. நோபல் பரிசு வென்றவர் உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டவர்.

இந்தியாவின் நோபல் பரிசு வென்றவர்களின் பட்டியல்:

  • 1913-ஆம் ஆண்டு மகாகவி ரவீந்திரநாத் தாகூருக்கு, இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.இதுவே இந்தியர் ஒருவருக்குக் கிடைத்த முதல் நோபல் பரிசு.
  • 1930-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி சர் சி.வி.ராமனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. ஸ்ரீ சந்திரசேகர வெங்கட ராமன் ஒளி சிதறலில் தனது சிறப்பான பணிக்காக இந்தியாவிலிருந்து 2வது நோபல் பரிசு பெற்றவர். அவர் கண்டுபிடித்த நாள் – பிப்ரவரி 28, இந்தியாவில் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. பாரத ரத்னா விருதும் பெற்றவர்.
  • 1968-ஆம் ஆண்டு மரபியல் குறித்த தனது சிறந்த ஆராய்ச்சி மருத்துவத்துக்கான ராய்ப்பூரில் பிறந்த ஹர் கோவிந்த் குரானா நோபல் பரிசு பெற்றார். அவர் தனது சக ஆராய்ச்சியாளர் மார்ஷல் டபிள்யூ. நிரன்பெர்க்குடன் பரிசைப் பகிர்ந்து கொண்டார்.
  • அல்பேனியாவில் பிறந்து, இந்தியக் குடியுரிமை பெற்றவரான அன்னை தெரசாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு 1979-இல் வழங்கப்பட்டது. செர்பியாவில் பிறந்தாலும், அன்னை தெரசா தனது 19 வயதில் இந்தியாவுக்குச் சென்று, ஏழைகளுக்கு சேவை செய்வதற்கும், மேம்படுத்துவதற்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். 1948-இல் அன்னை தெரசா “மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி” என்ற அமைப்பின் மூலம் பணியாற்றத் தொடங்கினார். வறுமையை ஒழிக்க அவர் போராடி 1979 இல் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

nobel

  • 1983-ஆம் ஆண்டு சுப்ரமணியன் சந்திரசேகருக்கு இயற்பியலுக்கான நோபல் வழங்கப்பட்டது.
  • அமர்த்யா சென்னுக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 1998-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இவர் “The Argumentative Indian” எழுதியவர்.
  • தமிழ்நாட்டை சேர்ந்த வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் 2009-ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார். பத்ம விபூஷண விருதும் பெற்றவர்.
  • கைலாஷ் சத்யார்த்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு, 2014-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
  • அபிஜித் பானர்ஜி இந்தியாவில் பிறந்து படித்த இவர், நோபல் பரிசு பெற்றவர்களின் பட்டியலில் சமீபத்தில் சேர்க்கப்பட்டவர். இவர் 2019-ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை பெற்றார். அவர்களின் பணி உலகளாவிய வறுமையை ஒழிப்பதை அடிப்படையாகக் கொண்டது. அவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

அறிவியலில் திருப்புமுனை – இந்தியர்கள் நிகழ்த்திய சாதனை:

science

இந்த நவீன உலகில் அறிவியல் கண்டுபிடிப்புகள் மகத்தான புரட்சிகளை உருவாக்கியுள்ளன. இன்றைய காலகட்டத்தில் புதிதாக ஏதேனும் கண்டுபிடிக்கப்பட்டால், அது உலகெங்கும் கொண்டாடப்படுவது நாம் சாதாரணமாக காணும் ஒன்று. இந்த சமயத்தில் இந்தியாவில் பலர், விஞ்ஞானத்தில் பல திருப்புமுனைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

சத்யேந்திர நாத் போஸ்சின் சாதனை: 

இந்தியாவின் தலை சிறந்த கணிதவியல் மற்றும் இயற்பியல் விஞ்ஞானி சத்யேந்திர நாத் போஸ், சர்வதேச அணுத்துகளின் அளவில் குவாண்டம் இயக்கவியலின் செயல்பாட்டுக்காக மிகவும் பேசப்பட்டார். 1920 களில் பிரபலமடைந்த இவர், கணிதவியல் மற்றும் இயற்பியல் துறையில் போஸான் அல்லது கடவுள் துகள் என்ற அணுத்துகளை கண்டுபிடித்ததற்காக பாராட்டப்பட்டார். அதுமட்டுமில்லாமல், இயற்பியலில் அரிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்திய புகழ்பெற்ற ஜெர்மன் இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுடன் இணைந்து பணியாற்றினார்.

Satyendra Nath Bose

போஸ்-ஐன்ஸ்டீன் கணக்கீடுகள் (Bose–Einstein statistics) சத்யேந்திராவின் மிக முக்கியமான சாதனை. அவர் குவாண்டம் இயற்பியல் மற்றும் சார்பியல் கோட்பாட்டில் பணிபுரிந்தபோது, ​​​​பிளாங்கின் குவாண்டம் கதிர்வீச்சு விதியைப் பெறுவதற்கான கட்டுரை ஒன்று எழுதி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அனுப்பினார். ஐன்ஸ்டீன் அந்த ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தார். இயற்பியல் துறையில் பல புதிய கண்டுபிடிப்புகளுக்கு இது மிகவும் முக்கியமானதாகவும் அடிப்படையாகவும் இருந்தது.

science

போஸ்-ஐன்ஸ்டீன் கன்டென்சேட் என்பது போசான்களின் நீர்த்த வாயுவின் பொருளின் நிலையைப் பற்றிய போஸ் மற்றும் ஐன்ஸ்டீனின் கணிப்பின் விளைவாகும். போஸின் பிறப்பு & துவக்கக் கல்வி சத்யேந்திர நாத் போஸ், ஜனவரி 1, 1894 அன்று பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகரான கொல்கத்தாவில் பிறந்தார். இதன்பின், அறிவியல் என்றால் இவரை மறக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது. அவர் தான் விஞ்ஞானத்தில் இந்தியாவிற்கு மிகப்பெரிய பங்காற்றிய ஏவுகணை நாயகன் அப்துல் கலாம்.

ஏவுகணை நாயகனாக திகழ்ந்த அப்துல் கலாம்:

Abdul Kalam

ஏவுகணை நாயகனாக திகழ்ந்த ஏபிஜே அப்துல் கலாம் இந்திய விண்வெளித் துறைக்கு மகத்தான பங்களிப்பை தந்துள்ளார். மேலும், இவர் இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக 2002 முதல் 2007 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர். இவர் மறைந்தாலும், இவரது சாதனை உயிரோடு தான் இருக்கும். விண்வெளி துறையில் ராக்கெட் ஏவுவது என்பது இந்தியாவிற்கு மிகப்பெரிய கனவாக இருந்த நிலையில், SLV உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர். அதன் மூலம் முதன்முதலாக ரோகிணி செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பி இவர் சாதனை படைத்தார்.

slv

இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதன் மூலமாக இந்தியாவும் முதன்முதலாக விண்வெளி துறையில் தடம் பதித்து வரலாற்று சாதனை படைத்தது. இதன்பின், பல ஆண்டுகளாக இஸ்ரோவில் பணியாற்றிய அப்துல் கலாம், இந்திய பாதுகாப்பு துறையை பலப்படுத்தும் விதமாக உள்நாட்டிலேயே ஏவுகணையை உருவாக்கும் தலைமை பொறுப்பை ஏற்றார். அவர் தலைமையின் கீழ் அக்னி மற்றும் பிரித்வி ஏவுகணைகள் உருவாக்கப்பட்டதால் இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்பட்டார். பின்னர் பொக்ரான் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக செய்து முத்திரை பதித்தார். இதன் மூலம் அணு ஆயுத நாடுகள் பட்டியலில் இந்தியாவை இணைத்தார்.

bomb

இதனைத்தொடர்ந்து, விண்வெளி துறையில் பெரும் வளர்ச்சி பெற்று இந்தியா புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகிறது. உலக நாடுகளுடன் போட்டி போடும் வகையில் ஏவுகணைகளை விண்ணில் செலுத்தி வருகிறது.

இஸ்ரோ ஏற்கனவே PSLV மற்றும் GSLV ஆகியவற்றுக்கு பிறகு இஸ்ரோவின் மூன்றாவjக SSLV என்ற பெயரில் ஏவுகணை வாகனம் தயாரித்து உள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் கனவுத் திட்டமான ககன்யான் மற்றும் நிலவு குறித்த ஆராய்ச்சிக்கான சந்திராயன் சீரிஸின் அடுத்த திட்டமான சந்திராயம் – 3 ஆகியவை விரைவில் துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

gaganyaan

 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment