நோர்வே எழுத்தாளருக்கு இலக்கிய துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு.! 

ஒவ்வொரு வருடமும் மருத்துவம், இயற்பியல் , வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் உலக அளவில் சிறப்பாக செயலாற்றுவர்களுக்கு நோபல் விருது வழங்ப்படும். இதற்கான விருதுகள் திங்கள் கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது.

கடந்த திங்கள் கிழமை அக்டோபர் 2ஆம் தேதி மருத்துவத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி கண்டறிந்ததற்காக ஹங்கேரி நாட்டை சேர்ந்த கட்டலின் கரிக்கோ மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ட்ரே வீஸ்மேன் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

அடுத்த நாள் செவ்வாயன்று அக்டோபர் 4ஆம் தேதி அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்குள் இருக்கும் எலக்ட்ரான்களின் உலகத்தை ஆராய்வதற்கான புதிய கருவிகளை கண்டறிந்ததற்காக இயற்பியல் ஆராய்ச்சியாளர்களான ஆஸ்பெக்ட், ஜான் எஃப். கிளாசர் மற்றும் அன்டன் ஜீலிங்கர் ஆகிய 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கபட்டது.

நேற்று புதன் அன்று (அக்டோபர் 5) வேதியியல் துறைக்கான விருது அறிவிக்கப்பட்டது. குவாண்டம் புள்ளிகள் தொடர்பான ஆய்வுக்காக மௌங்கி பவெண்டி, லூயிஸ் ப்ரூஸ், அலெக்ஸி எகிமோவ் ஆகியோருக்கு நோபல் பரிசு பகிர்ந்து அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று 2023 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு நோர்வே எழுத்தாளர் ஜான் ஃபோஸுக்கு அறிவிக்கப்பட்டது. இவர் for his innovative plays and prose which give voice to the unsayable. எனும் புத்தகத்தை எழுதியதற்காக வழங்கப்பட உள்ளது.

நாளை அமைதிக்கான நோபல் பரிசும், வரும் அக்டோபர் 9ஆம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.