‘பரிசோதனை கருவிகள் இல்லை’ – இருமல் மற்றும் சளி காரணமாக கடந்த 27 நாட்களில் 36 மரணம்…!

பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள சக்ரா தொகுதியில், கடந்த 27 நாட்களில் 36 பேர் இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளால் இறந்துள்ளனர்.

பீகாரில் கொரோனா சோதனை கருவிகள் பற்றாக்குறை, திருட்டுத்தனமாக சந்தையில் விற்கப்படும் மருந்து உபகாரணங்கள் காரணமாக, ஒரு சில கிராமங்களில், கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை தீவிரமாக தாக்குதலை நடத்தி வருகிறது.

அந்த வகையில், பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள சக்ரா தொகுதியில், கடந்த 27 நாட்களில் 36 பேர் இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளால் இறந்துள்ளனர். இவர்கள், கோவிட் -19 நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக கிராமவாசிகள் கூறினாலும், உள்ளூர் நிர்வாகம் அவர்களின் கூற்றுக்களை மறுத்துள்ளது. இதனால் பீதியடைந்த கிராம வாசிகள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

சக்ரா பிளாக்கின் சர்பஞ்ச் பிரமோத் குமார் குப்தா கூறுகையில், சில முதியவர்கள் இறந்துவிட்ட நிலையில், மீதமுள்ளவர்கள் இருமல், சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மரணங்கள் திடீரென அதிகரித்தது குறித்து அவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்ததாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இருமல் மற்றும் சளி காரணமாக கடந்த 27 நாட்களில் 36 இறப்புகள் பதிவாகியுள்ளதாக மருத்துவ அதிகாரியிடம் தெரிவித்தேன். ஆனால் கிட்கள் எதுவும் இல்லை. நான் மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் கிட்களைக் கேட்டு, சோதனைக்கான கருவிகள் இப்போது கிடைத்துள்ளது. சோதனை செய்யப்படுகிறது என குப்தா தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.