டெல்லியில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு..மக்கள் பீதியடைய தேவையில்லை -முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில்கொரோனா எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துவிட்டது எனதகவல் வெளியாகியுள்ளது. ஆனால் 72,000 பேர்குணமடைந்தனர். இதனால்  மக்கள் பீதி அடையத் தேவையில்லை.

மருத்துவமனையில் 25,000 நோயாளிகளில்  15,000 பேர் வீட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருந்தாலும் இறப்பு விகிதமும் குறைந்துள்ளது. நாட்டின் முதல் கொரோனா பிளாஸ்மா வங்கியையும் நாங்கள் தொடங்கியுள்ளோம். மிதமான நோயாளிகளுக்கு கணிசமாக மேம்பட பிளாஸ்மா சிகிச்சை உதவும் என்று எங்கள் சோதனைகள் காட்டுகின்றன என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

பிளாஸ்மா தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை விட தானம் செய்ய முன்வருபவர்களை எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தகுதியுள்ள அனைவருமே முன் வந்து பிளாஸ்மா தானம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இது எந்த வலியையும் பின் விளைவையும் ஏற்படுத்தாது எனவும் முதல்வர் கூறினார்.

குணமடைந்த நோயாளிகளுக்கு மருத்துவமனைகள் ஆலோசனை வழங்க வேண்டும் மற்றும் பிளாஸ்மா தானம் செய்ய ஊக்குவிக்க வேண்டும் எனஅரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.