இனி பேரிடர் காலத்தில் கவலை இல்லை…செயற்கைக்கோள் மூலம் போன் பேசலாம்.!

China Satellite: பேரிடர் காலத்தில் கூட சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த செயற்கை கோளை பயன்படுத்தி இனி போன் பேசலாம்.

பேரிடர் காலத்தில் மக்களை காப்பற்ற முக்கியமாக அமைவது மீட்பு பணியினர் பணி தான். ஆனால், மீட்பு பணியினரால் மக்களை காப்பற்ற வேண்டும் என்றால் மொபைல் போன்ற ஒரு தொலை தொடர்பு கருவி வேண்டும். ஆனால் அதில் சிக்கல் என்னவென்றால் அது போன்ற பேரிடர் நிகழும் போது மொபைல் டவர்களும் பாதிக்கபடுவதால் தொடர்பு கொள்ள எந்த ஒரு பொருளும் இல்லாமல் மக்கள் அவதிக்குள்ளாவார்கள்.

தற்போது, அது போன்ற சூழலில் இனி மொபைல் டவர்களின் பயன்பாடு இல்லாமல் நேரடியாக, செயற்கை கோளை பயன்படுத்தி பேரிடர் காலத்தில் கூட நம்மால் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ள முடியும் என்று சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கெனவே விஞ்ஞானிகள் ஒரு தனி ரக செயற்கை கோளை உருவாக்கி உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் என்னும் மாகாணத்தில் கடந்த 2008-ம் ஆண்டு 8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு 80,000-க்கும் அதிகமான உயிரிழப்புகள் பரிதாபமாக பலியாகியது.

இந்த நிகழ்வு சீனாவில் அப்போது பெரும் சோகத்தை  ​​ஏற்படுத்தியது. மேலும், அன்றைய நாளில் தொலை தொடர்பின் பின்னடைவால் தான் அப்படி ஒரு பெரும் உயிர் சேதங்கள் ஏற்பட்டது என்னும் காரணத்தால் தான் இந்த டியான்டாங்  திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

இந்த டியான்டாங் (Tiantong-1) திட்டத்தை கடந்த 16 ஆண்டுகள் கையில் எடுத்து அதில் உள்ள தொழிநுட்பத்தில் படிப்படியாக பல மாற்றங்களை செய்து தற்போது சில பெரிய முன்னேற்றங்களையும் கண்டுள்ளனர் சீன விஞ்ஞானிகள்.  இதில் மூன்று செயற்கைக் கோள்கள் வரிசையாக உள்ளது அதனை சுமார் 36,000 கிலோ மீட்டர் உயரத்தில் சாய்வாகச் சுற்றி கொண்டிருக்கும்.

இது ஆசிய-பசிபிக் கடல் முழுவதும் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபடும் ஆற்றலைக் கொண்டுள்ளது எனவும் கூறுகின்றனர். மேலும், இது படிப்படியாக மக்களின் நடைமுறை பயன்பாட்டிற்கும் வந்து விடும் என்றும் சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு சீனாவின் சேர்ந்த  ஹூவாய் (Huawei) நிறுவனம் செயற்கை கோள்களை பயன்படுத்தி போன் பேசும் புதிய வசதியைக் கொண்ட மொபைல் போனை அறிமுகப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, இது போன்ற செயற்கை கோளை அறிமுகப்படுத்தி சீனா உலகத்தை தங்கள் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.