இனி Digital Tamilnadu! இ – அலுவலக முறைக்கு மாறுகிறது தலைமை செயலகம்!

தலைமைச் செயலகத்தில் உள்ள 40 துறைகளையும் இ – அலுவலக முறைக்கு மாற்றும் பணி.

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள 40 துறைகளின் அலுவலகங்களை இ – அலுவலகம் (மின்னணு அலுவலங்கள்) முறைக்கு மாற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக முதலமைச்சர் அலுவலகம், தகவல் தொழில்நுட்பம், வருவாய் உள்ளிட்ட 8 துறைகளின் அலுவலகங்கள் இ – அலுவலகம் முறைக்கு மாற்றம் செய்யப்படுகிறது.

இனி Digital Tamilnadu என்ற முறையில் அரசு அலுவலகங்களை கணினிமயமாக்கப்படும் பணியில் தமிழக அரசு மும்மரம் காண்பித்து வருகிறது. இ – அலுவலகம் என்பது எங்கிருந்து வேணாலும் பணியாற்றலாம் என்பதாகும். எங்கிருந்தாலும் பணியாற்றும் வகையில், அரசு அமைப்புகள், முக்கிய அலுவலகங்கள் என 500க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் இ – அலுவலகமாக மாற்றும் பணிகள் கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வந்து தற்போது நிறைவு பெற்றுள்ளது.

பழைய கோப்புகளை இணையதளத்தில் பதிவேற்ற 25 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் நடைபெற்று வரும் பணியில் முதற்கட்டமாக தலைமை செயலகத்தில் உள்ள 8 துறைகளின் அலுவலகங்கள் இ – அலுவலகம் முறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தகவல் கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்