இலவச பஸ் பாஸ் கிடையாது – அம்பேத்கர் சட்டக் கல்லூரி அறிவிப்பு!

அம்பேத்கர் சட்டக் கல்லூரி அடையாள அட்டையைக் காட்டி, சலுகை கட்டண அட்டை பெற்றே பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டும்.

அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் மாநகர பேருந்துகளில் பயணம் செய்து கல்லூரிக்கு வந்து செல்வதற்கு இலவச பயண சலுகை அட்டை (பஸ் பாஸ்) கிடையாது என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. மாணவ, மாணவிகள் கல்லூரி அடையாள அட்டையுடன் பேருந்து சலுகை கட்டண அட்டையை பயன்படுத்தி (ஏசி பஸ் தவிர) பயணம் செய்யலாம் என தெரிவித்துள்ளது.

பேருந்து பயண சலுகை கட்டண அட்டை இல்லாத மாணவ, மாணவிகள் பயண சீட்டை பெற்றுத்தான் பயணம் செய்ய வேண்டும். இலவச டிக்கெட் கேட்டு பேருந்துகளில் தகராறில் ஈடுபடக்கூடாது. மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலவச பஸ் பாஸ் தொடர்பாக அரசிடம் அனுமதி கேட்டுள்ள நிலையில், அதில் தெளிவான உத்தரவு வரும் வரை தற்போதைய உத்தரவின்படியே மாணவர்கள் பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்